ஐதராபாத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை... தேடப்பட்ட குற்றவாளி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

0 7314

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயதான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தான். 

சைதாபாத்தில், கடந்த 9 ஆம் தேதி காணாமல் போன சிறுமியின் உடல் பின்னர் பக்கத்து வீட்டில் வசித்த  பல்லகொண்டா ராஜு என்பன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான அவனை பிடிக்க பல போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. அவனை குறித்த தகவல் தருபவர்களுக்கு போலீஸ் 10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்தது.

அத்துடன்  பல்லகொண்டா ராஜு என்கவுன்டர் செய்யப்படுவான் என தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி கூறியிருந்தார். இந்த நிலயில் அவன் தண்டவளாத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments