தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2743

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், தென் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

18,19 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என  கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments