ஆப்கானில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படுத்தப் தாலிபான்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்த வழி - இம்ரான் கான்

0 2158

ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசை அங்கீகரிப்பதற்குக் கருத்தொற்றுமையை உருவாக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் ஆப்கானிஸ்தானில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்தச் சிறந்த வழி தாலிபான்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது தான் எனக் தெரிவித்துள்ளார்.

பெண்ணுரிமை, அனைவரையும் உள்ளடக்கிய அரசு ஆகியவற்றைச் செயல்படுத்த அவர்களுக்கு நிதியுதவியை அறிவிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் பெண்களுக்கான உரிமைகளை வெளியில் இருந்து யாரும் பெற்றுத் தந்துவிட முடியாது என்றும், அவர்களே உரிமைகளைப் பெற்றுக்கொள்வர் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments