கோவில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2903

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோவில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் படி மூன்று கோயில்களிலும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் நாளொன்றுக்கு 7500 பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மூன்று வேளையும் சாம்பார், ரசம், இரண்டு வகையான கூட்டு வழங்கப்படும் எனவும்,  விஷேச நாட்களில் உணவுடன் சேர்ந்து அப்பளம் மற்றும் பயாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments