2022ல் இந்தியா உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் - அமெரிக்க வர்த்தக வளர்ச்சி அமைப்பு தகவல்

0 1790

அடுத்த ஆண்டில், இந்தியா, உலகிலேயே மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் என அமெரிக்க வர்த்தக வளர்ச்சி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 6 புள்ளி 7 சதவிகித வளர்ச்சியை எட்டும் எனவும், அதற்கு அடுத்ததாக 5 புள்ளி 7 சதவிகித வளர்ச்சியுடன் சீனா இரண்டாவது இடத்தை பிடிக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நடப்பு 2021ல் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 8 புள்ளி 3 ஆகவும், அதற்கு அடுத்த இடத்தில் 7 புள்ளி 2 சதவிகித ஜிடிபி வளர்ச்சியுடன் இந்தியா 2 ஆவது இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ல் உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5 புள்ளி 3 சதவிகிதமாக இருக்கும் எனவும், கடந்த 50 ஆண்டுகளில் இதுவே மிகவும் விரைவான வளர்ச்சி என்றும் அமெரிக்க வர்த்தக வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments