கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து நொடிக்கு 17,000 கன அடியாக அதிகரிப்பு

0 1866

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து பத்தாயிரத்து 900 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்துக்கு நேற்று மாலையில் 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 11 ஆயிரத்து 521 கன அடியாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments