சமூகநீதி முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கக் குழு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 2082

தமிழ்நாட்டில் சமூகநீதி முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments