சீனாவின் அதிகாரப் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பாதுகாப்பு கூட்டணி அமைப்பு

0 1757

இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பாதுகாப்பு கூட்டணி அமைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் ஜோ பைடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், AUKUS என்ற இந்த புதிய கூட்டணி இந்தோ பசிபிக்கை பாதுகாப்பான பிரதேசமாக மாற்றும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்குவது இக்கூட்டணியின் முதல் செயல்திட்டமாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments