புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிப்பு

0 1642

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரவு 10.30 மணியிலிருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து வித கடைகள் , வணிக நிறுவனங்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரை குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறிக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம்.

தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை இயங்கலாம். உணவங்கள், தங்கும் விடுதிகள், மதுபானக்கடைகளில்  50 சதவீத பேர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.திரையரங்கங்கள் 50 சதவீத பேர்களுடன் இரவு 9 மணி வரை இயங்கலாம். கடற்கரை சாலை , பூங்காக்களில்  காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொது மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments