வெள்ளரி ஊறுகாய் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் வழிப்பறி

0 1876
வெள்ளரி ஊறுகாய் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வெள்ளரி ஊறுகாய் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 30 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகம்மது ஜனால் என்ற நபர் சேலம் தலைவாசல் பகுதியில் வெள்ளரி ஊறுகாய் நிறுவனம் நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம் பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்த வெள்ளரிப் பிஞ்சுகளுக்கான பணம் 30 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தலைவாசலிலிருந்து மராக்காணத்துக்கு தனது ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளார்.

அவருடன் ஊறுகாய் நிறுவன மேலாளர் இராஜா, ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி, சிபிச் சக்கரவர்த்தி என 3 பேர் காரில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற காரை மரக்காணம் அடுத்த பெருமுக்கல் ஏரிக்கரை அருகே 4 பைக்குளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கார் கண்ணாடியை உடைத்து கத்தியைக் காட்டி மிரட்டி 30 லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்தக் கும்பல் தலைவாசலில் இருந்தே காரை பின் தொடர்ந்து வந்ததை கண்டுபிடித்துள்ள போலீசார், அவர்களைத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments