உள்ளாட்சி தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் - தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 2341

உள்ளாட்சி தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுகவுக்காக பாடுபட்ட மூத்த முன்னோடிகள் 5 பேருக்கு ஸ்டாலின் விருது வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக மாதத்திற்கு இரண்டு முறை ஆய்வு செய்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் தன்னுடைய கடமை என தெரிவித்தார்.

தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான சபதத்தை தொண்டர்கள் எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments