ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த முதியவருக்கு தீவிர சிகிச்சை

0 1682
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த முதியவருக்கு தீவிர சிகிச்சை

கோவில் கட்டுமானப் பணிக்காக தனது நிலத்தைக் கையகப்படுத்திவிட்டு, மாற்று இடம் வழங்கவில்லை எனக் கூறி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த முதியவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

கதவாளம் பகுதியை சேர்ந்த நந்தன் என்ற 80 வயது முதியவருக்கு ஊர் மத்தியில் 3 செண்ட் நிலம் இருந்துள்ளது. கோவில் கட்டும் பணிக்காக ஊர் பஞ்சாயத்து சார்பில் அந்த நிலத்தை முதியவரிடம் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலாக வேறொரு இடம் தருவதாக உறுதியளித்தகாகவும் ஆனால் 2 மாதங்கள் கழித்தும் நிலம் எதையும் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர் எனவும் கூறி, நந்தன் தான் கையோடு வாங்கி வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. 90 விழுக்காடு தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments