மறுமணத்திற்கு வரன் தேடும் பெண்களை குறி வைத்து பண மோசடி; 32 பெண்களை ஏமாற்றிய நைஜீரிய மோசடி கும்பல்

0 2036

மறுமணத்திற்கு மேட்ரிமோனியில் வரன் தேடிய பெண்ணிடம் பண மோசடி செய்த நைஜீரிய கும்பல், இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த 32 பெண்களை ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் கைதான நைஜீரியர்கள் 2 பேரை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மொத்தமாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதையும், 7 பேர் கொண்ட கும்பல் மோசடியில் ஈடுபட்டதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

மறுமணத்திற்கு வரன் தேடும் பெண்களை மேட்ரிமோனி வெப்சைட்டில் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதால், அவர்களை குறிவைத்து மோசடி செய்ததாகவும் நைஜீரியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மோசடிக்காகவே போலி ஆவணங்கள் மூலம் விசா வாங்கி இந்தியாவில் வந்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments