வாணியம்பாடி மஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கு ; கொலைக்கு உதவியதாக மேலும் 4 பேர் கைது

0 1852
வாணியம்பாடி மஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கு ; கொலைக்கு உதவியதாக மேலும் 4 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்ததற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பிரமுகர் வசீம் அக்ரம் கடந்த 10ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்த அன்றே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்கிழமை கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 6 பேர் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கஞ்சா வியாபாரி டீல் இம்தியாசும் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

இந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய பைசல், யூசுப் ஜமால், முகமது அலி, நயிம் ஆகிய 4 பேரை வாணியம்பாடி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments