வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் முடக்கம்

0 3135

சசிகலாவின் உறவினர் வி.என். சுதாகரனுக்கு சொந்தமான சிறுதாவூரில் உள்ள 21 ஏக்கர் நிலத்தையும் பினாமி சொத்து தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து சசிகலாவின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.

தற்போது சிறுதாவூரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரனுக்கு சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை முடக்கி அதற்கான அறிவிப்பாணையையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு ஒட்டியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments