அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி

0 1519
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை பெயரளவிலேயே உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி ஜாமீன் கோரிய மனு, நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை ஒருவரைக் கைது செய்தால் அவரது வீடு அலுவலகங்களில் சோதனையிட வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளாரா என ஆய்வு செய்யவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அவ்வாறெல்லாம் இப்போது செய்வதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments