7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சில அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்பு வரவில்லை என புகார்

0 1842
7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த சில மாணவர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்பு வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் ஆன்லைனில் தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கலந்தாய்விற்கான அழைப்பு வராததால் உரிய கல்லூரி கிடைக்குமா என அரசுப்பள்ளி மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டப்போது, 7.5% இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுள்ள மாணவர்களின் பெயர் விடுபட்டிருந்தால், பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments