மொத்தமாக மது விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவதில்லை ; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி

0 2334
மொத்தமாக மது விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவதில்லை

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகோணத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் , தங்களுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 300,500 பாட்டில்களை வாங்கி பதுக்கி விற்பனை செய்துள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, நிலுவையில் வேறு வழக்கு இல்லாதவர்களுக்கு ஜாமீன் வழங்கினார். ஒரு நபருக்கு 300, 500 மதுபானங்களை விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதி, அடுத்த வழக்கு விசாரணையின் போது இது சம்பந்தமான முழு தகவலையும் சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments