அதிமுக மீது எந்த விமர்சனமோ, முரண்பாடோ இல்லை - பா.ம.க. வழக்கறிஞர் பாலு

0 2472
அதிமுக மீது எந்த விமர்சனமோ, முரண்பாடோ இல்லை

அ.தி.மு.க.வை பா.ம.க. விமர்சித்தால், பதில் விமர்சனம் வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில், தாங்கள் எந்த விமர்சன கருத்தையும் கூறவில்லை எனவும், அதிமுகவுடன் நட்புறவிலேயே இருப்பதாகவும் பா.ம.க.வின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், யாருடைய கட்டாயத்தின் பெயரில் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தது என தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பா.ம.க. வழக்கறிஞர் பாலு, கட்சியில் பெரும்பான்மையானோர் போட்டியிட வாய்ப்பு வழங்கவும், தேர்தலுக்கு உரிய கால அவகாசம் இல்லததாலுமே தனித்து போட்டியிட முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments