IPL போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி..!

0 3530

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில்  மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், போட்டியை காண மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரசிகர்கள் வருகிற 16-ம் தேதி முதல் ஐ.பி.எல். நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments