9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 1601
9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கு வந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் மனுதாரர் தெரிவித்தார்.

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும், பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments