கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் - முதலமைச்சர்

0 2674

நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவ, மாணவிகள் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.

பல குளறுபடிகளை கொண்ட நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அநீதியாக நடக்கும் இந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யும் சூழலை நிச்சயம் ஏற்படுத்துவோம் என உறுதியளித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கு மீறிய அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் எனவும், பிள்ளைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments