மேம்பாலத்தில் சென்ற பைக் மீது "ஆடி" கார் மோதி கோர விபத்து.. இருவர் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி..!

0 2851

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், ஆடி கார் மோதியதால், இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

செவ்வாய் இரவு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் பெங்களூரில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரித்தம் மற்றும் ஸ்ருதிக்கா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் ஆடி காரில் வந்த நபர் அவர்களை முந்திச் செல்ல முயன்ற போது பைக்கின் பின்புறத்தில் கார் மோதியதால் இருவரும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

பாலத்தின் கீழ் உள்ள சாலையில் விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய ஆடி கார் மேம்பாலத்தின் விளிம்பில் தொங்கியபடி நின்றது. காரில் இருந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments