இருசக்கர வாகனத்தை திருடி தள்ளிச் சென்ற சிறுவன் ; சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்த போலீசார்

0 1440
இருசக்கர வாகனத்தை திருடி தள்ளிச் சென்ற சிறுவன் ; சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்த போலீசார்

சென்னை கோயம்பேடு அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். நெற்குன்றத்தை சேர்ந்த பாலாஜி என்பவர், தனது பல்சர் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில், ஆழ்வார் திருநகரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

போதைக்கு அடிமையான அச்சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாது என்பதால் அதனை திருடி தள்ளியபடியே சென்று இரண்டாயிரம் முதல், 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை என மிக மிக குறைந்த விலைக்கு விற்றது தெரிய வந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments