நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் நடைமுறையை துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1662

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு  உளவியல் ஆலோசனை வழங்கும் நடைமுறையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தர்.

அத்துடன் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமும் அவர் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். இங்குள்ள 104 இலவச மருத்துவ சேவை மையத்திலிருந்து, 40 உளவியல் மற்றும் மன நல ஆலோசகர்கள், 24மணி நேரமும் மாணவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.

இதற்காக தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய1லட்சத்து 12ஆயிரம் பேரின் செல்போன் எண்கள் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அனைவரிடமும்  முதலில் இரண்டு நிமிடம் பேச ஒப்புதல் கேட்கப்பட்டு, அதிக பட்சம் 20 நாட்களுக்குள் அனைவரிடமும் பேச திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments