சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதிய கார்-இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி .. இரக்கம் இன்றி உடைமையை திருடி சென்ற மர்ம நபர்..!

0 4001
சென்னை அருகே தாம்பரத்தில் சாலையின் நடுவே நடந்து சென்ற இளைஞர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

சென்னை அருகே தாம்பரத்தில் சாலையின் நடுவே நடந்து சென்ற இளைஞர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கி பலியாகி கிடந்த இளைஞரின் உடமையை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடப்பேரி பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் அர்ஜூன் பணி முடிந்து அதிகாலை 2 மணியளவில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையின் நடுவே ஆபத்தை உணராமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஆர்ஜூன் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இளைஞர் மீது மோதிய வேகத்தில் காரும் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி திரும்பியது. விபத்தில் சிக்கி உயிரிழந்த கிடந்த அர்ஜுன் அருகே கிடந்த அவரது பேக் உள்ளிட்ட உடமைகளை மர்ம நபர் ஒருவன் சிறிதும் இரக்கம் இன்றி திருடி சென்றதும் தெரியவந்தள்ளது.

பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தனது நண்பர் வாங்கி ஒரு வாரமே ஆன புதிய காரை இரவல் வாங்கி வந்து ஓட்டிய போது விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், விபத்தில் இறந்த அர்ஜுனின் உடமைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments