30 நாட்களில் 1121 குளங்களை உருவாக்கி திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை..!

0 8096

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் 30 நாட்களில் 1,121 குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

மாவட்ட பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, உழவின்மை உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்கவும், மழை நீரை சேமிக்கவும் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 541 பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு 30 நாட்களில் 1,121 பண்ணைக் குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குளமும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் என்ற அளவில் 3 லட்சத்து 64 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 40 கோடியே 69 லட்சம் லிட்டர் தண்ணீரினை தேக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  முயற்சியை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ், தமிழன் புக் ஆப்ஃ ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments