தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

0 1588

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா பகுதிகள் உட்பட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

18, 19 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு இருநாட்களுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments