நீட் தேர்வு தோல்வி பயம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை.. தொடரும் சோகம்..!

0 5039

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, நீட் தேர்வு எழுதியிருந்த சௌந்தர்யா என்ற மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளை பறிகொடுத்த தாய், கதறி துடித்து அழுதது காண்போரை உருக்குலையைச் செய்தது.

காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதிக்கு 4 மகள்கள் இருந்தனர். கூலித் தொழில் செய்து வரும் இவர்களது 4ஆவது மகளான சௌந்தர்யா, பத்தாம் வகுப்பில் 410 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 600-க்கு 510 மதிப்பெண்களும் பெற்றவர். கடந்த 12-ம் தேதி கிங்ஸ்டன் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிய சௌந்தர்யா, அதற்கு பிறகு தோல்வி அடைந்துவிடுவேன் எனக் கூறி பெற்றோரிடம் 2 நாட்களாக அழுது கொண்டே இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து, அறையை பூட்டிக் கொண்ட சௌந்தர்யா, தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, சௌந்தர்யா தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்துள்ளார்.

மகளை பறிகொடுத்த தாயின் கதறலும், பரிதவிப்பும் காண்போரை கண்கலங்கச் செய்ததோடு, தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது.

சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவனும், அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments