ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது.. 18 பேர் முதலிடம்.. 44 பேர் 100 சதவீத மதிப்பெண்கள்..!

0 1851
நாடு முழுவதும் 4 கட்டங்களாக நடைபெற்ற ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 2.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 4 கட்டங்களாக நடைபெற்ற ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 2.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 26,27,31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் 4 கட்டங்களாக நடத்தப்பட்டன.

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்ட தேர்வில் 9.34 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் அதன் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் 44 பேர், 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 18 பேர் முதல் இடத்தில் உள்ளனர்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 2.45 லட்சம் மாணவர்கள் JEE Advanced தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments