பொறியாளர் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

0 1448

பொறியாளர் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானப் பொறியாளரும், பாரதரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளில் அவரது சாதனையை நினைவுகூர்வதுடன், அவருக்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடினமாக உழைக்கும் பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பூமியைச் சிறப்பாகவும், தொழில்நுட்ப முறையிலும் மேம்படுத்துவதில் பொறியாளர்களின் பங்களிப்புக்கு நன்றிகூறச் சொற்களே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments