பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை

0 1264

முன்னாள் முதலமைச்சரான பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

சென்னை அண்ணா சாலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்றிருந்தார்.

இதேபோன்று, வள்ளுவர் கோட்டத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அத்தோடு, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர், அண்ணா சாலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று, எழும்பூர் மதிமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments