சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை இழுத்து சென்ற முதலை

0 1895

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை முதலை இழுத்துச் சென்றதாக கூறப்படுவதை அடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர்  தனது சகோதரர்களான செல்வமணி, பன்னீர்செல்வம் ஆகியோருடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது ஆற்றில் இருந்த முதலை அவரை இழுத்துச் சென்றதைப் பார்த்த சகோதரர்கள் கரையில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

அதற்குள் முதலை கோபாலகிருஷ்ணனை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் கோபால கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments