ஆட்டோவில் 6 வயது சிறுமி கடத்தல்... 12 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார்

0 2362

ஹைதராபாதில் கடத்திச் செல்லப்பட்ட 6 வயது சிறுமியை, 12 மணி நேரத்திற்குள் போலீசார் மீட்டனர்.

தெருவில் பிச்சை எடுத்து வரும் சிறுமியின் தாய்க்கு நிறைய பணம் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர், இருவரையும் ஆட்டோவில் அழைத்துச் சென்றார். சிறுமியின் தாயை பாதி வழியில் இறக்கி விட்டு, ஆட்டோவில் சிறுமியைக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து அந்தப் பெண்ணைத் தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் அந்தப் பெண் ஆட்டோவில் சென்ற சாலைகளை ஆராய்ந்த போலீசார், பரூக் நகர் பகுதியில் ஆசியா பீவி என்பவரை கைது செய்து, சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments