திமுக முன்னாள் எம்பி பேரன் கொலையில் மருமகன் உள்பட 6 பேர் கைது

0 2865

நாமக்கல் மாவட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி சோமசுந்தரத்தின் பேரன் படுகொலையில் மருமகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி., சோமசுந்தரத்தின் பேரன் ராஜேந்திரன். கடந்த வாரம் தனது நிலத்தின் ஒரு பகுதியை பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ராஜேந்திரன் விற்றுள்ளார்.

இதனால், ராஜேந்திரனுக்கும் அவரது மருமகன், மகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் 12ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரனை 6 பேர் கொண்ட கும்பல் குத்திக் கொலை செய்தது. இதுகுறித்த விசாரணையில் மருமகன் நவீன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 5 பேரை பேளுக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments