இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் குண்டு வைக்க சதி? 6 தீவிரவாதிகள் கைது

0 12984

பண்டிகைக் காலங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவும் முக்கியத் தலைவர்களைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டிய 6 தீவிரவாதிகளை மூன்று மாநிலங்களில் நடத்திய அதிரடி வேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதில் 2 தீவிரவாதிகள் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. பயிற்சி பெற்றவர்கள்.

அவர்களிடம் வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாவூதின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் ஹவாலா பணம் மூலமாக தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து சதித்திட்டங்களை அரங்கேற்றி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments