உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஆதரவாளர்கள் 3 பேர் கைது

0 1300

உத்தர பிரதேசத்தில் தீவிரவாத எதிர்ப்புப் படையினர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவாளர்கள் 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

லக்னோ, ரே பரேலி, பிரதாப்கார் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பிரயாக்ராஜ் நகரில் இருந்து பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். 

அதன்பின் அந்த வெடிகுண்டு, நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டது. இந்த அதிரடி சோதனையில், ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பைச் சேர்ந்த, 3 தீவிரவாதிகளையும், தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments