உயர் தொழில்நுட்ப வசதிகளுடன், ஐபோன் 13 சீரிஸ் அறிமுகம்

0 4986

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சிரீஸ் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவையுடன் ஐபோன் மினி, ப்ரோ, ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட 4 மாடல்களில் அறிமுகமாகியுள்ளது.

ஐபோன் 12 ப்ரோ சீரிசை ஒத்த வகையில் 13 சிரீஸ் வெளியாகி உள்ளதாகவும், மற்ற சிரீஸ் மாடல்களின் தொடுதிரை அளவை விட தற்போதையை மாடல் 20 சதவீதம் சிறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

XDR ஓ.எல்.இ.டி. திரை, பிரத்யேக A15 பயோனிக் சிப் பிராசஸார் உள்ளிட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 சிரீஸ்சில் கூடுதலாக இரண்டரை மணி நேரம் உழைக்கும் வகையில் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பின்புற கேமிரா நவீன முறையில் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஐபோன் 13 ப்ரோ ஸ்டோரேஜ் கொள்திறன் 1TB அளவில் உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன் 13 ப்ரோ இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயிலும், ஐபோன் ப்ரோ மேக்ஸ் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், கிராபைட், கோல்டு, சில்வர் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல் 69 ஆயிரத்து 900 ரூபாயில் ஐபோன் 13-ம், 79 ஆயிரத்து 900 ரூபாயில் ஐபோன் 13 மினியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128GB இன்பில்ட் ஸ்டோரேஜ் கொள்திறன் 2 மடங்காக பெருக்கும் வகையிலும், பிங்க், நீலம், சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் செல்போன் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட 30 நாடுகளில் முன்பதிவு மூலம் ஒருவார காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments