அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா ஓய்வு அறிவிப்பு

0 2483

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா அறிவித்துள்ளார்.

தன் சமூக வலைதள பக்கத்தில், எனது டி20 ஷூக்களுக்கு  100 சதவீத ஓய்வு அளிக்க விரும்புகிறேன். அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெறுகிறேன். உறுதுணையாக இருந்த சக வீரர்கள், போட்டித் தேர்வர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் முழுக்கு போட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டுமொத்தமாக 546 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள யார்க்கர் மன்னனின் தலைமையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments