மாநில மொழிகளுடன் சேர்ந்து இந்தி செயல்பட வேண்டும் - அமைச்சர் அமித் ஷா

0 2341

அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழமையாக இணைந்து செயல்படுவதால் மட்டுமே இந்தி வளர முடியும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற இந்தி தினம் 2021 கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு பேசிய அவர், தாய்மொழியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று கூறினார். பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் தாய்மொழியில் உரையாட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் குழந்தைகள் தங்களது வேர்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள் என்றும் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அமைச்சர், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் படிப்புகள் கற்றுத் தரப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY