அண்ணனை அலேக்கா தூக்கி மல்லாக்க வீச முயன்ற தம்பிகள்..! சொத்துக்காக சம்பவம்

0 3354

சொத்து பாகபிரிவினைக்காக சொந்த அண்ணனை இரண்டு தம்பிகள் சேர்ந்து 3 வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீச முயன்ற பதற வைக்கும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது...

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கடோல்கர்குல்லி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், இவருக்கு சுனில், சந்தீப் ஆகிய இரு சகோதரர்கள் உள்ளனர். சொத்துப் பிரச்சனை காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஸ்ரீதரிடம் அடிக்கடி தகராறு செய்வதும் அடித்து துன்புறுத்துவதாக இருந்து வந்தனர். இதுகுறித்து இரு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை விசாரித்த போலீசார், சொத்துக்காக சண்டை போடவேண்டாம் சமாதானமாக செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் .

இந்நிலையில் சம்பவத்தன்று சொத்தில் பங்கு வேண்டாம் என கையெழுத்து போடும் படி போதையில் இருந்த இரு சகோதரர்களும் மிரட்டியதால் ஸ்ரீதர் வீட்டில் உள்ள தனது துணிமணிகளை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறிச்சென்றுள்ளார். சொத்து வேண்டாம் என்று கையெழுத்து போடாமல் சென்ற அண்ணன் ஸ்ரீதரை அடித்து உதைத்து அலேக்காக தூக்கி இரு சகோதரர்களும் வீட்டின் 3 வது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி கொலை செய்ய முயன்றனர்.

பால்கனி கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டு வெளிப்பக்கமாக அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய ஸ்ரீதரை அவரது தாயும், தந்தையும் பிடித்து மீட்க போராடினர். ஆனால் போதையில் இருந்த சகோதரர்கள், தந்தையையும் தாக்கினர்

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை எதிர்வீட்டில் உள்ள ஒருவர் வீடியோவாக பதிவிட்டதை தொடர்ந்து போதை சகோதரர்கள், ஸ்ரீதரை அப்படியே அந்தரத்தில் விட்டுச்சென்றனர். உயிர் பிழைத்த ஸ்ரீதர் கடேபஜார் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சகோதரர் சந்தீப், சுனில், சுனிலின் மனைவி தனியா மற்றும் மகனை காப்பாற்றுவது போல நடித்ததோடு, சொத்து பிரச்சனையை கொலை செய்யும் அளவுக்கு ஊதி பெரிதாக்கியதால் தாய் சுதாவையும் சேர்த்து மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சொத்துக்காக உடன் பிறந்த அண்ணன் என்று பாராமல் சகோதரர்கள் செய்த இந்த படுபாதக செயலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments