காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை.. மரணத்திற்கு காதலியும், குடும்பத்தினரும் தான் காரணம் என பேனர் வைத்ததால் சர்ச்சை..!

0 3095

புதுச்சேரியில் காதல் தோல்வியால் இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இளைஞரின் மரணத்திற்கு காதலியும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என புகைப்படத்தோடு இறுதி ஊர்வலத்தில் பேனர் வைத்த சம்பவம் நடந்துள்ளது.

யுவராஜ் என்ற இளைஞரும், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில்,  யுவராஜ் திடீரென விபத்தில் சிக்கி வீட்டில் முடங்கியுள்ளார். அதன் பின்னர் யுவராஜிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் யுவராஜின் மரணத்திற்கு காதலியும், அவரது தாயும் தான் காரணம் என பேனர் அடித்து ஒட்டியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments