குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

0 1605

குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் கடற்படை மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ராஜ்கோட், ஜாம் நகர், ஜுனாகத் உள்பட ஏராளமான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ள பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று உணவு பொருட்களை வழங்கினர்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாம்நகரில் முதலமைச்சர் பூப்பேந்திர படேல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவித்த 24 பேர் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments