நீட் தேர்வால் அரியலூர் மாணவி பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2072

கல்வி சமத்துவத்தை சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும், தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வால் அரியலூர் மாணவி கனிமொழி பலியாகி இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குவதுடன், இது போன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம் தராத சூழலை உருவாக்கிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments