சுயசார்பை நோக்கி ராணுவம்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

0 2405
சுயசார்பை நோக்கி ராணுவம்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையில் இருந்து மாறி உலகின் மிகப்பெரிய ராணுவ ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மஹேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  அப்போது பேசிய அவர், இந்தியாவின் ராணுவ தளவாட மையமாக அலிகார் மாறி வருவதாக கூறினார். அலிகாரில் ஏற்கனவே பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை  அமைத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

நவீன கிரனேடுகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், டிரோன்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவே உற்பத்தி செய்வதாக கூறிய அவர், பெரிய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியாளர் என்ற அடையாளத்தை இந்தியா பெற்று வருவதாக பெருமையுடன் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு தொழில்வழித்தடம், மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவை பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை எட்ட உதவும் என கூறினார். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் ஏற்பட்ட இரட்டை நன்மைகளுக்கு உத்தரப் பிரதேசம் ஒரு ஒளிமயமான எடுத்துக்காட்டாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என இகழப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு தலைமை வகிப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments