மது அருந்தி நண்பனை தாக்கிய வழக்கில் கைதான இருவருக்கும் உத்தரவாதம் அளித்தால் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 1481
மது அருந்தி நண்பனை தாக்கிய வழக்கில் கைதான இருவருக்கும் உத்தரவாதம் அளித்தால் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்

மது அருந்தி நண்பனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும், இனி குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கிய பிரமுகர்கள் அல்லது ஊர் தலைவர்களில் யாராவது உறுதி அளித்தால், அவர்களுக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும், மதுபோதையில் நண்பர் சுரேஷை பீர் பாட்டிலால் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிவா, கார்த்திக் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, இவர்கள் ஜாமினில் வெளியே வந்தால், அது சமூகத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments