இரவில் வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய கும்பல் ; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 பேருக்கு வலைவீச்சு

0 1470
இரவில் வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய கும்பல் ; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 பேருக்கு வலைவீச்சு

சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை இரவில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கே.கே நகர் 10வது செக்டாருக்கு இரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அங்கிருந்த கார்கள் மற்றும் பைக்குகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

அவர்கள் கையில் இரண்டடி நீள கத்தி இருப்பதை கண்டு அச்சமடைந்த மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் நடத்திய விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திருட்டு ராஜேஷ் மற்றும் ஆதி இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதே கும்பல் கே.கே நகரில் இருந்து ஆழ்வார்திருநகர் சென்று ஏராளமான பைக்குகளை அடித்து நொறுக்கியதுடன், பால் வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டியதும், பின்னர் வளசரவாக்கத்தில் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் ஊழியரை சரமாரியாக வெட்டியதும் தெரியவந்தது. அவர்கள் கஞ்சா போதையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments