உணவகங்களில் அதிரடி ரெய்டு: கெட்டுப்போன 50 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிப்பு!

0 2085

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உணவகங்களில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

ஆரணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசைவ உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதோடு, அதில் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த நிலையில், உணவுபாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆரணி பகுதியில் தொடர்ந்து 4-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காதர்பாஷா என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் முறையாக சமையல் கூடம் இல்லாததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சுமார்  20க்கும் மேற்பட்ட உணவகங்களில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்ததுடன், முறையாக செயல்படாத 18 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments