சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்துக் கொள்ள டெலிகிராமில் கணக்கை தொடங்கியது மத்திய அரசு

0 3031

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்துக் கொள்வதற்கான டெலிகிராம் கணக்கை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு தொடர்பாக வெளியாகக் கூடிய விவரங்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து அறிந்து கொள்வதற்காக PIB Fact Check என்ற பிரிவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கடந்த 2019-ல் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில், அரசினுடைய கொள்கைகள், திட்டங்கள் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை அடையாளம் காணும் வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கணக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பெயரில் ஃபேக்ட் செக் என்ற பெயரில் டெலிகிராமில் போலியான கணக்குகள் உலா வந்த நிலையில், அவற்றை நீக்க நடவடிக்கை எடுத்ததோடு, மத்திய அமைச்சகம் டெலிகிராமிலும் கணக்கைத் தொடங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments