தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்கிற மத்திய அரசின் வேகவரம்பு ரத்து

0 3074

தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வாகனங்கள் செல்ல அனுமதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சாலை விபத்தில் சிக்கிய பெண் பல் மருத்துவர் ஒருவர், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கவே வாகனங்களுக்கான வேகம் அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டது.

அத்தோடு, தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டருக்குள்ளான வேகத்திலேயே வாகனங்கள் செல்ல வேண்டும் என வரம்பை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு ஆணையிட்டு, அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments